Friday 17th of May 2024 06:27:25 AM GMT

LANGUAGE - TAMIL
-
சர்ச்சைக்குரிய திபெத் பிராந்தியத்துக்கு  சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் விஜயம்!

சர்ச்சைக்குரிய திபெத் பிராந்தியத்துக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் விஜயம்!


சர்ச்சைக்குரிய தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்திற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் விஜயம் செய்துள்ளார்.

ஜி ஜின்பிங் சீன ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் திபெத்துக்கான அவரது முதல் பயணமாக இது அமைந்துள்ளது. அத்துடன், சீன ஜனாதிபதி ஒருவர் 30 வருடங்களுக்கு பின்னர் திபெத்துக்கு மேற்கொண்ட பயணமாகவும் இது பதிவாகியுள்ளது.

திபெத் தன்னாட்சி பிராந்தியத்தின் தலைநகரான லாசா பகுதிகளில் ஜி ஜின்பிங் கள ஆய்வில் ஈடுபட்டதாக சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நூற்றாண்டுகளாக சீனாவின் சர்ச்சைக்குரிய பகுதியாக திபெத் இருந்துவருகிறது. அமைதியான வழியில் சுதந்திரம் அடைந்துவிட்டதாக கடந்த 1951ஆம் ஆண்டு திபெத் அறிவித்தது.

எனினும் தங்களின் கட்டுப்பாட்டில் தான் திபெத் உள்ளது என சீனா தொடர்ந்து தெரிவித்துவருகிறது. சீனாவின் ஆளுகையில் வளர்ச்சி குன்றிய பகுதியாக திபெத் இருந்ததாகவும் சுதந்திரத்திற்கு பிறகுதான் கல்வி உட்கட்டமைப்ப வசதிகள் கொண்டு வரப்பட்டதாகவும் திபெத் தெரிவித்துள்ளது.

சீனாவால் தாம் ஒடுக்கப்படுவதாகவும் தமது கலாசாரத்தை சீனா மெதுவாக அழித்துவருவதாகவும் சீனாவால் நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதியான பின்னர் பிறகு முதல்முறையாக ஜி ஜின்பிங் திபெத்திற்கு சென்றுள்ளார். 30 ஆண்டுகளின் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் திபெத் சென்ற அரிதான சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை ஜி ஜின்பிங் திபெத் சென்றபோதும் இன்றுதான் இதுகுறித்து சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


Category: செய்திகள், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE